தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.
2006 சட்டமன்றத் தேர்தல்
இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
- 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும்,
- 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும்,
- 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும்,
- 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும்
2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக