ஞாயிறு, 18 மே, 2014

நரேந்திர மோடி

    நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை:

          அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாடப்பட்டுள்ளது. குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக