சனி, 17 மே, 2014

சரித்திர வெற்றி: நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து!

தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தமிழக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதலில் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான். இந்த சந்திப்பு மூலம் மோடி தங்களைப் பெருமைப்படுத்தியதாக ரஜினி மனைவி லதா கூற, மோடி ஒரு சிறந்த நிர்வாகி என ரஜினி பாராட்டினார்.

சரித்திர வெற்றி: நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து!
http://tamilnaduarasiyalkalam.blogspot.com/
இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்திருக்கிறது. அதே போல தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும், யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிவிட்டரில் ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில்:
 "அன்புமிக்க நரேந்திர மோடிஜியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு வாழ்த்துகள் 
(Hearty Congratulations dear @narendramodi Ji on your historic win. Best wishes)" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 
அவர் விடுத்துள்ள வாழ்த்தில், "அபார வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள் (My congratulations to Tamil Nadu chief minister Jayalalitha ji on her landslide victory)" என்று குறிப்பிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக