வெள்ளி, 30 மே, 2014

அமைச்சர்களுக்கு மோடி-யின் ஆறு கட்டளைகள்

   அமைச்சர்களுக்கு மோடி ஆறு கட்டளை

1, எந்த ஒரு அமைச்சரும் தனது தனி செயலாளராக அல்லது உதவியாளராக தனது உறவினரை நியமிக்க கூடாது.

2, உறவினர்கள் யாருக்கும் எந்தவித சலுகையும் வழங்ககூடாது .

3,உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்க கூடாது.

4, அமைச்சர் பதவியில் நேரமையாக நடந்துகொள்ள வேண்டும்.

5, அமைச்சர்கள் யாரும் ஆடம்பரமாக அதிகமாக செலவு செய்ய கூடாது , அரசு செலவுகளை குறைக்க வேண்டும்.

6, அமைச்சரானதால் மக்களிடம் இடைவெளி ஏற்பட கூடாது. நேர்த்தி தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்


செவ்வாய், 27 மே, 2014

சார்க் நாட்டு தலைவர்களுடனான பிரதமர் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை

இலங்கை தமிழர்
நிலை குறித்து பிரதமர்
நரேந்திரமோடி இலங்கை அதிபர்
ராஜபக்சேவுடன்
விவாதித்தார் என்றும்,
தமிழர்கள்
நிலை குறித்து அக்கறை கொள்ள
பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும்
இலங்கை வர ராஜபக்சே விடுத்த
அழைப்பை மோடி ஏற்று கொண்டார்
என்றும் இந்திய
வெளியுறவு துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். சார்க்
நாட்டு தலைவர்களுடனான பிரதமர்
நரேந்திரமோடியின் இன்றைய
பேச்சு பயனுள்ளதாகவும், சார்க்
நாட்டு உறவுகள் வலுப்பெறும்
வகையிலும் இருந்தது என
வெளியுறவு துறை செயலர்
சுஜாதாசிங் கூறினார். பிரதமர்
நரேந்திரமோடி இன்று அண்டை நாடான
ஆப்கான், பாகிஸ்தான், இலங்கை,
நேபாளம், மொரீஷியஸ்,
மாலத்தீவு தலைவர்களுடன்
இன்று பேச்சு நடத்தினார். இதில் என்ன
விஷயங்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளோம். இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், ஆப்கனில் பயங்கரவாதம்
ஒழிப்புக்கு இந்தியாவின்
ஒத்துழைப்பு குறித்து பிரதமர்
நரேந்திரமோடி அதிபர் கர்சாயுடன்
பேசினார். சமீபத்திய இந்திய தூதரகம்
மீது நடந்த தாக்குதல்
முறியடிப்புக்கு உதவிய கர்சாயிக்கு ,
பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மொரீஷியஸ் பிரதமர்
நவீன்சந்திர ராம் கூலமிடம் நடத்திய
பேச்சில் அமைதி, மற்றும் வளர்ச்சிப்பணிகள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகள் உறவு,
பொருளாதாரம்,
புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆகியன குறித்தும்,
இந்திய கடல் பகுதியில் இரு நாடுகள்
ஒத்துழைப்பு ஆகியன குறித்தும்
விவாதிக்கபட்டன.
பூட்டான் மன்னர் ஷெரீங்
டாப்கேவிடம் நடத்திய பேச்சில் ,
சிறப்பு சமூக சேவைக்கு உதவி, எனர்ஜி மற்றும்
சர்வதேச அரசியல் நிலவரம்
குறித்து விவாதிக்கப்பட்டது.
மாலத்தீவு அதிபர்
அப்துல்லா கயூமுடன் நடந்த பேச்சில்,
இரு நாடுகளும் தேசிய அளவிலான
பங்கீட்டில் ஒத்துழைப்பு. மற்றும்
பயங்கரவாத
ஒழிப்பு தொடர்பாக
ஒத்துழைப்பது,
போக்குவரத்து இணைப்பு ஆகியன,
பெட்ரோலியம், எண்ணெய்
துறையில் பங்கீடு, ஆகியன
விவாதிக்கப்பட்டன.
நேபாள பிரதமர்
கொய்ராலாவுடன் , நேபாள-
இந்தியா, நேபாள இருநாடுகளும்
பாரம்பரிய, கலாச்சார விஷயத்தில்
உடன்பாடுகள்,
பொருளாதார ரீதியிலான,
நடவடிக்கைகள், ஹைட்ரோ பவர், அமைப்பதில்
தேவையான உதவிகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன்,
நடத்தப்பட்ட பேச்சில், இந்தியாவின்
உணர்வுப்பூர்வ விஷயங்கள், தமிழ்
மக்கள் வாழ்க்கைத்தரம், 13 வது சட்ட
திருத்தம் கொண்டு வருவது,
வர்த்தக ரீதியிலான உறவு,
போக்குவரத்து இணைப்பு, ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டன . மீனவர்கள்
பிரச்னை என்பது நீண்ட காலமாக
இருந்து வருகிறது இது குறித்து தீர்க்க
தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும்.
தமிழர் நிலையில் இந்தியாவின்
உணர்வை அந்நாடு மதிக்கும் என்ற
நம்பிக்கை இன்றைய பேச்சின் மூலம்
ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப்புடன் : பாகிஸ்தான்
நிச்சயம் இந்தியாவுக்கான
பயங்கரவாதத்தை ஒழிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்
நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான
எல்லை பயங்கரவாத செயல்கள்
நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இந்திய (மும்பை)
குண்டு வெடிப்பு தொடர்பான
வழக்கில், உடனடியாக
இயல்பு நிலைக்கு இரு நாடு பிரச்னைகளும்
வரவேண்டும், பொருளாதாரம்,
அரசியல், கலாச்சாரம்
ஆகியனவற்றில் முன்னேற்ற நடவடிக்கை வர
வேண்டும் என்பது குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின்
வாழ்த்துக்களை அந்நாட்டு சபாநாயகர்,
பிரதமர் மோடிக்கு தெரிவித்தார். நீண்ட
கால உறவு நண்பராக இருந்து,
ஒன்றிணைந்து, ரயில்,
சாலை போக்குவரத்து ஆகியவற்றில்
தேவையான உடன்பாடுகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு வெளியுறவு செயலர்
சுஜாதாசிங் கூறினார

மத்திய கேபினட் அமைச்சர்கள் முழு விவரம்

காபினட் அந்தஸ்து யாருக்கு ? :

சுஷ்மா -வெளியுறவு - ,

ஜெட்லி - நிதி, ராஜ்நாத்-
உள்துறை, நிதின்கட்காரி- போக்குவரத்து,
ரவிசங்கர் பிரசாத்- தகவல் மற்றும்
தொலை தொடர்பு துறை,
ராம்விலாஸ்பஸ்வான்,
( வேளாண் துறை ) ,
வெங்கையாநாயுடு-உமாபாரதி,
நஜ்மாஹெப்துல்லா,
ராதா மோகன்சிங், ஹர்சவர்த்தன்,
சதானந்தகவுடா, கோபிநாத்முண்டே,
கல்ராஜ்மிஸ்ரா, அனந்த்குமார்,
ஹரீஸ்மிராத்கவுர், நரேந்திரசிங்தோமர்,
ஜூவல்ஓரான், தவர்சந்த்கெலாட்,
ஸ்மிருதிஇராணி, மேனகா,
ஆனந்த்குமார், ராஜி, அனந்தகீதே,
ஹர்சவர்தன், ஆகியோர் மத்திய
அமைச்சர்களாக
பொறுப்பு ஏற்றனர்.

தனிப்பொறுப்பு ; 

வீ.கே.,சிங்,
ராவ்இந்திரஜித்சிங், சந்தோஷ்குமார்
கங்குவார்,ஷரிபாத்நாயக்,
தர்மேந்திரபிதான்,
சர்பானந்தா சோனாவால், பிரகாஷ்
ஜவேட்கர், பயூஸ் கோயல், ஜிதேந்திரசிங்,
நிர்மலா சீத்தாராமன், ராவ்
இந்திரஜித், ஆகியோர் மோடியுடன்
பொறுப்பை ஏற்றனர்.
இணை அமைச்சர்கள் யார் ?
ஜி.எம்.ஜிதேஸ்வரா, மனோஜ்சின்கா,
உபேந்திரகுஷ்வாகா, பொன்.
ராதாகிருஷ்ணன், கிரன்ரிஜ்ஜூ,
கிருஷ்ணன்பால்குஜர், சஞ்சீவ்குமார்,
பல்யான்மன்சுக்பாய்
பாஸ்வா,ராவ்சாகப் தான்வே,
விஸ்ணுதேவ், சுதர்சன்பகத்,
ஆகியோர்இணை அமைச்சர்கள்
பொறுப்பை ஏற்றனர்

செவ்வாய், 20 மே, 2014

பலிக்காமல் போன பாலு கணக்கு! - தஞ்சை தி.மு.க

தி.மு.க-வின் கோட்டை எனச் சொல்லப்படும் தஞ்சைத் தொகுதியில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசுரபலம் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் தளிக்கோட்டை ராஜா பாலு (டி.ஆர்.பாலு) அ.தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பரசுராமனிடம் 1,44,119 ஓட்டில் தோற்றுப்போயிருக்கிறார்.

பாலுவின் சாதனைகள்

புறவழிச்சாலைகள் 91, மேம்பாலங்கள் 334, பெரிய பாலங்கள் 72, ரயில்வே மேம்பாலங்கள் 61, இவையெல்லாம் பாலுவால் தமிழகம் கண்ட பலன்கள். அடையாறு நதியைத் தூய்மைப்படுத்த ரூ. 491 கோடி, காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைத் தூய்மைப்படுத்த ரூ. 1,100 கோடி, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 35,798 கோடி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ. 15,001 கோடி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 244 கோடி; இவ்வளவும் டி.ஆர். பாலு முயற்சியால் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவை. ஆனால், இந்தச் சாதனைகளுக்கு டி.ஆர். பாலுவின் தடாலடிக் குணமே அகழி பறித்துவிட்டது.

தஞ்சையை நோக்கி…

கடந்த முறை தென்சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மாறிய டி.ஆர். பாலு, இந்தமுறை தனது சொந்த பூமியான தஞ்சையில் களமிறங்க 2011-லிருந்தே திட்டம் வகுக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தி.மு.க. வேட்பாளர் மகேஷ் கிருஷ்ணசாமிக்குப் பொருளாதாரரீதியில் உதவிடும்படி மாவட்டச் செயலாளரான பழனிமாணிக்கத்திடம் ஸ்டாலின் சொன்னார். அதை அந்தத் தரப்பு சரிவர நிறைவேற்றவில்லை. இதனால் பழனிமாணிக்கம் மீது ஸ்டாலினுக்கு மன வருத்தம். அதனால், அவரும் பாலுவின் தஞ்சைப் பயணத்துக்குத் தலையாட்டிவிட்டார். நேரடியாகக் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கட்சியின் சட்டதிட்டங்கள் தடுக்கும் என்பதால், தனது உறவினர் வீட்டுத் திருமணங்கள் தஞ்சை மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் தவறாமல் ஆஜரானார் பாலு. உள்நோக்கம் தெரிந்துபோனதால் பழனிமாணிக்கம் தரப்பால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

திருமணங்களை வைத்துத் திருவடி பதித்த பாலு, தஞ்சையை மையப்படுத்திப் புதிய ரயில்களை விட்டதுடன், புதிய ரயில்வே திட்டங்களுக்கும் தடம் போட்டார். இவையெல்லாம் தன்னால்தான் வந்ததாக பழனிமாணிக்கமும் தண்டோரா போட்டார். இதனால், இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையில் அடிதடி ரகளை என தஞ்சை தி.மு.க. ரணகளப்பட்டது. ஒரு கட்டத்தில் தஞ்சைக்கு பாலுவே ஸ்டாலினை நேரடியாக அழைத்துவரவும் ஆரம்பித்தார். கட்சிக்குள் சட்டதிட்டம் பேசும் கட்சித் தலைமை இதையும் வேடிக்கை பார்த்தது.

இதனால், கொதிப்படைந்த பழனிமாணிக்கம் தரப்பு, மெதுவாக கனிமொழி பக்கம் சாய்ந்தது. பாலு தரப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கனிமொழியை அழைத்துவந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பாலுவைக் கண்டிக்கும் விதமாக பழனிமாணிக்கம் ஊடகங்களில் பேச, அதை கருணாநிதியிடம் முறையிட்டார் பாலு. முடிவில் கருணாநிதி தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துவைத்தார். ஆனாலும், புகைச்சல் நின்றபாடில்லை. இந்தத் தேர்தலில் பழனிமாணிக்கத்துக்குத் தஞ்சையிலும் செஞ்சி ராமச்சந்திரனுக்குக் கடலூரிலும் சீட் கொடுக்க கடைசிவரை முயற்சித்தார் கருணாநிதி. இரண்டுமே நடக்கவில்லை. செஞ்சியாருக்குப் பொன்முடியும் பழனிமாணிக்கத்துக்கு பாலுவும் இடைஞ்சலாக நின்றார்கள். தனக்கு சீட் இல்லை என்றதும் அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார் செஞ்சியார். பழனிமாணிக்கத்துக்கு சீட் இல்லை என்றதும் டி.ஆர். பாலுவின் கொடும்பாவியை எரித்து ஆதங்கத்தைத் தணித்துக்கொண்டார்கள் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள்.

மக்கள் எதிர்ப்பு

அதே சமயம் டி.ஆர். பாலு வருகிறார் என்றதுமே தஞ்சையில் அவருக்கு எதிரான அஸ்திரங்கள் கூர்தீட்டப்பட்டன. தனது தொழில் அபிவிருத்திக்காகவே அவர் தஞ்சை வருவதாகத் தகவல் பரப்பினார்கள். மன்னார்குடியில் உள்ள பாலுவின் மதுபான ஆலையும் பல பேருக்குக் கண்ணை உறுத்தியது. மன்னார்குடி அருகே வடசேரியில் இயங்கிவரும் டி.ஆர். பாலுவின் கிங்ஸ் கெமிக்கல் ஆலைக்கு எதிராக 2010-ல் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அப்போது ஆலை வளாகத்துக்குள்ளேயே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாளை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக அனுசரித்துவருகிறார்கள் வடசேரி மக்கள்.

இதேபோல், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததில் டி.ஆர். பாலுவுக்கும் பங்கிருக்கிறது எனப் பல தரப்பிலும் புகார் கிளப்பினார்கள். அவருக்கு எதிராக விவசாயச் சங்கத்தினர் தீர்மானமே போட்டார்கள். பதறிப்போன பாலு, “விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அமல்படுத்த விட மாட்டேன்” என மறுத்தார். ஆனாலும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. ‘நம்மாழ்வார் இறப்புக்குக் காரணமானவர்களுக்கா உங்கள் ஓட்டு?’ எனச் சுவரொட்டி ஒட்டினார்கள்.

சாதிரீதியாகப் பிளவுபட்ட தஞ்சை

கட்சி முழுக்க பழனிமாணிக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தஞ்சை தி.மு.க. பாலுவுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கவில்லை. அதைப் பற்றி பாலு கவலைப்படவும் இல்லை. பாலுவுக்கு ஆதரவாக அவரது அகமுடையார் சமூகத்தினர் அணி திரட்ட, கள்ளர் சமூகம் பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. மொத்தத்தில் டி.ஆர். பாலுவின் வருகையால் தஞ்சை தி.மு.க. சாதிரீதியாக இரண்டுபட்டதுதான் மிச்சம்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த தஞ்சை வாக்காளர்கள், எட்டு முறை போட்டியிட்டு ஐந்து முறை எம்.பி-யாகி, இரண்டு முறை அமைச்சராக இருந்தவரை விட்டுவிட்டு, எதற்காக டி.ஆர். பாலுவுக்கு இங்கே சீட் கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கான பதில்தான் பரசுராமனின் வெற்றி!

ஞாயிறு, 18 மே, 2014

வைகோ - அரசியல் வரலாறு

http://tamilnaduarasiyalkalam.blogspot.com/

வைகோ (பி. மே 22, 1944; இயற்பெயர்: வை. கோபால்சாமி) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார். இவர் பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியை கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலை பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.

அரசியல் வாழ்வில் முதல் படி:

1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வை

தமிழக அரசியல் களம் ON FB

http://tamilnaduarasiyalkalam.blogspot.com/


ON FB S PAGE

நரேந்திர மோடி

    நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை:

          அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாடப்பட்டுள்ளது. குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.

தி.மு.க

திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டெம்பர் 17, 1949ல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது  

தி.மு.க

தே.மு.தி.க - வரலாறு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.

2006 சட்டமன்றத் தேர்தல்

இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

  • 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 
  • 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும்,
  • 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும்,
  • 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 

2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.

அ.தி.மு.க

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (சுருக்கமாக அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்) தொடங்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சி இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது.

இக்கட்சியின் மூலம் தேர்தலை சந்தித்தும், தற்காலிகமாகவும் எம். ஜி. இராமச்சந்திரன், இரா. நெடுஞ்செழியன், ஜானகி இராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக ஆகியுள்ளார்கள்.

வரலாறு:

          காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம். ஜி. ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக அரசியல் நிலவரம்

அ.தி.மு.க - வலுவான நிலையில் உள்ளது

தே.மு.தி.க - கூட்டணியால் அவதி

ம.தி.மு.க - மந்தமான நிலை,ஆளும்கட்சியின் எதிர்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் : வைகோ கருத்து

http://tamilnaduarasiyalkalam.blogspot.com/

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பது தான் ஜனநாயகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.”
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

சனி, 17 மே, 2014

சாட்டை வீசும் 'நோட்டா' - நோட்டா-வின் நோக்கம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், நல்லதொரு இடத்தைப் பிடித்து, நம்பிக்கையை விதைத்திருக்கிறது 'நோட்டா' (NOTA).

தேர்தல் திருவிழா ஆரம்பமாகிவிட்டாலே...
''வாக்களிக்காமல் இருக்காதீர்கள்...''
''உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறாதீர்கள்...''
என்றெல்லாம் கெஞ்சலாக ஆரம்பித்து,
''வாக்களிக்கமால் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்..''
''வாக்களிக்காதவர்களை, சிறையில் அடைக்க வேண்டும்''
''நாட்டை விட்டு விரட்ட வேண்டும்'' என்று உச்சபட்ச மிரட்டல் சத்தம் வரை கேட்பது வாடிக்கை.

"ஜனநாயக நாட்டில் வாக்களிக்காமல் இருப்பது நியாயமல்லதான். சரி, நாங்கள் வாக்களிக்கத் தயார்... தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் நல்லவர்... நியாயமாக ஆட்சி நடத்தப்போகிறவர் யார்... ஊழல் செய்யாமல் இருப்பவர் யார்... அடையாளம் காட்டுங்களேன்?!" என்று கேட்டால், பதில் தர ஆளிருப்பதில்லை. அல்லது தங்களுக்கு வேண்டியவர் என்பதற்காக பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆம்ஆத்மி என்று ஏதாவது ஒருவரை கைகாட்டுவார்கள்.

'வாக்களிக்கறது கடமை... இதுல யாருக்கு போடறதுனு கேக்கறது நல்லாவா இருக்கு. எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளினு சொல்ல முடியும். ஏதோ ஒரு கொள்ளியை எடுத்து மண்டையை சொறிஞ்சிகிட்டு போக வேண்டியதுதான்' என்று வக்கணையாக இதற்கு பதில் சொல்பவர்களும் உண்டு. அதாவது, ஏதாவது ஒரு திருடனுக்கு நீ வாக்களித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நீ இந்தியனே இல்லை எனபதுதான் இதற்கு உட்பொருள்!

பலர், இது எதைப் பற்றியுமே கவலைப்படாமல், 'ம்க்கும்... இதுக்கெல்லாம் போய் க்யூவுல நின்னுகிட்டிருக்கணுமா... வேற வேலையில்ல?' என்றபடி வாக்களிக்காமல், அந்த நாளை ஒரு விடுமுறை நாளாக அனுபவிப்பது  தனிக்கதை.

ஆனால், நான் இந்தியன்... ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்... வாக்களித்தே தீரவேண்டும் என்று நினைப்பவர்கள், 'நல்லவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை... திரும்பத் திரும்ப திருடர்கள்தானே முளைக்கிறார்கள்' என்கிற வெறுப்பின் காரணமாக வாக்களிக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுதானே ஆகவேண்டும். இத்தகையோருக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக, இந்தத் தேர்தலில் வந்து சேர்ந்த நோட்டா... நல்ல நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கிறது!

ஏற்கெனவே '49 ஓ' என்று இருந்ததுதான், இப்போது 'நோட்டா'. கடந்த தேர்தல்களில் இந்த 49 ஓ என்பதை வாக்குச்சாவடியில் சொல்லி, உங்களுடைய வாக்கை யாருக்கும் பதிவு செய்ய விரும்பவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. இப்படி எழுதிக்கொடுக்க விரும்பாத பலர், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தனர். அதேபோல தேர்தல் பணியிலிருப்பவர்களுக்கும் இந்த 49 ஓ என்றால் என்ன என்பது தெரியாமல், ஏகப்பட்ட பிரச்னைகள் முளைத்தன.

இந்நிலையில்தான், இந்த ஆண்டு வாக்கு இயந்திரத்திலேயே வேட்பாளர்கள் வரிசையில் நோட்டாவையும் இணைத்து ஒரு பட்டன் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட, அதன்படியே நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் இது அமலாகிவிட்டது.

வேட்பாளர்களின் வரிசையில் கடைசி இடத்தில் 'நோட்டா'வுக்கு ஒரு பட்டன் கொடுக்கப்பட்டது (மேலே இருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்தான் நோட்டா-NOTA-None of the above). பெரிய அளவில் இதைப் பற்றிய பிரசாரம் இல்லாத நிலையில், இந்திய அளவில் சுமார் 60 லட்சம் வாக்குகளைப் பெற்று, ஒரு சில அரசியல் கட்சிகளைவிட, தெளிவானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது நோட்டா.

அகில இந்திய அளவில், இந்த நிமிடம் (மே-17, பகல் 1 மணி) வரை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் 527 தொகுதிகளின் முடிவின்படி, 59 லட்சத்தி, 97 ஆயிரத்தி, 289 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ள. மொத்த வாக்குகளில் இது 1.1 சதவிகிதம். ஐக்கிய ஜனதாதளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளைவிட, நோட்டாவின் வாக்குகள் அதிகம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 39 தொகுதிகளின் முடிவின்படி, 5 லட்சத்தி 80 ஆயிரத்தி 62 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகியுள்ளன. இது, மொத்த வாக்குகளில் 1.4 சதவிகிதம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளைக் காட்டிலும் அதிகம். நாடு முழுக்க நோட்டாவுக்கு பதிவாகியிருக்கும் வாக்குகளை ஒப்பிட்டால்... 9.71 சதவிகித வாக்குகள், தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன.

நீலகிரி தொகுதியில்தான் மிக அதிக அளவாக சுமார் 46 ஆயிரம் வாக்குகள் விழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம். அடுத்தடுத்த இடங்களை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், மத்திய சென்னை, தென்சென்னை ஆகியவை பிடித்துள்ளன. இவையெல்லாம் சுமார் 20 ஆயிரம் வாக்குகளை அள்ளியுள்ளன. சராசரியாக தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 15 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, 3 சதவிகித வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. 22,268 வாக்குகள் இங்கே பதிவாகியுள்ளன. இந்த மாநிலத்தில் பா.ம.க பெற்ற வாக்குகளைவிட சற்றே குறைவாகவும்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கு வாக்குகளைவிட சற்று கூடுதலாகவும் வாக்குகளைப் பெற்றிருக்கிறது நோட்டா.

'எல்லாம் சரி, இப்படி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் பெரிதாக பலன் என்ன வந்துவிடப்போகிறது. யாருக்கும் இல்லை என்பதைவிட, யாருக்காவது ஒருவருக்கு போடலாமே' என்று ஒரு கேள்வி எழக்கூடும்.
அந்த யாரோ ஒருவர்... நல்லவராக இருந்தால் சரி. அப்படியில்லாமல், கோடிகளில் கொள்ளையடிக்கக் கூடிய ஊழல் பேர்வழியாகவோ... நாளைக்கு கொள்ளையராக மாறக்கூடியவராகவே... இருந்தால், அந்தக் கொள்ளைக்கு நீங்களும் துணை போனதாகத்தானே அர்த்தம்.

'போட்டியிலிருக்கும் வேட்பாளர்களைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தாலும், அதை வைத்து தேர்தல் முடிவை மாற்ற முடியாது. வேட்பாளர்களில் யாருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளதோ... அவர்தான் வெற்றிபெற்றவர் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, இந்த நோட்டா என்ன மாறுதலை ஏற்படுத்திவிடப் போகிறது?' என்றும் கேள்வி வரலாம்.

சற்றே யோசியுங்கள்... 'நம்மைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழ ஆரம்பித்துள்ளன. மக்கள், அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்பை நன்றாகவே பதிவு செய்கிறார்கள். இப்படியே போனால், நமக்கு நல்லதல்ல' என்று அரசியல் கட்சிகளுக்கு தார்மிக பயம் நிச்சயமாக உருவாகும். இது, எதிர்காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியுமே, நல்ல வாக்குகளுடன் வெற்றிபெற வேண்டுமானால்... நல்லவர்களை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அவர்களால், நாட்டில் பெரும் மாற்றமே கூட உருவாகலாம்.

அதுமட்டுமல்ல... தேர்தல் நடைமுறையிலேயே கூட சீர்திருத்தங்களை கொண்டு வந்து, சதவிகித அடிப்படையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் இடம் கிடைக்கக் கூடும். அப்போது, சிறிய அளவில் இருக்கும் நியாயமான கட்சிகளுக்குக்கூட, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடம் கிடைத்து, கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
அகில இந்திய அளவில்....
அந்தந்த மாநிலங்களின் மொத்த வாக்குகளுக்கு ஏற்ப, சராசரியாக 1 சதவிகித வாக்குகள், நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. இதில் அதிக அளவில் பதிவாகியிருக்கும் சில மாநிலங்கள்...

உத்தரபிரதேசம்     5,92,406
தமிழ்நாடு                 5,82,062
பீகார்                           5,81,011
மேற்கு வங்கம்      5,62,276
குஜராத்                      4,54,880

ஆக, அநியாயக்காரர்களுக்கு எதிரான சாட்டையாக வந்திருக்கும் நோட்டாவை கையில் ஏந்துங்கள்... தேவைப்படும்போதெல்லாம் விளாசித் தள்ளுங்கள்!

சரித்திர வெற்றி: நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து!

தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தமிழக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதலில் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான். இந்த சந்திப்பு மூலம் மோடி தங்களைப் பெருமைப்படுத்தியதாக ரஜினி மனைவி லதா கூற, மோடி ஒரு சிறந்த நிர்வாகி என ரஜினி பாராட்டினார்.

சரித்திர வெற்றி: நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து!
http://tamilnaduarasiyalkalam.blogspot.com/
இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்திருக்கிறது. அதே போல தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும், யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிவிட்டரில் ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில்:
 "அன்புமிக்க நரேந்திர மோடிஜியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு வாழ்த்துகள் 
(Hearty Congratulations dear @narendramodi Ji on your historic win. Best wishes)" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 
அவர் விடுத்துள்ள வாழ்த்தில், "அபார வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள் (My congratulations to Tamil Nadu chief minister Jayalalitha ji on her landslide victory)" என்று குறிப்பிட்டுள்ளார்.



பெருபான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் மோடி

வாழ்த்துக்கள் மோடி....
வலிமையான வளமான பாரதத்தை உருவாக்குவீர்

http://tamilnaduarasiyalkalam.blogspot.com/