புதன், 25 ஜனவரி, 2017

நம்பகத்தன்மை கேள்விகுறியாய் - சீமான்

சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால்
திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?

2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா?

3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில்

“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது.
 சிறிது யோசியுங்கள்நண்பர்களே ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக