அதிமுக பாஜக இடையே கொள்கை ரீதியான வேறு பாடுகள் எதுவும் இல்லை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
கடந்த ஓராண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 4.5-லிருந்து 7.3 சதவீதமாக உயர்ந் துள்ளது. அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி யும், நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் மூலம் ரூ. 2.30 லட்சம் கோடியும் கிடைத்துள்ளது. திறன்மிக்க இளை ஞர்களை உருவாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. நாட்டின் பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணி களை இந்த ஓராண்டில் தொடங்கி யுள்ளோம். இந்த அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்திருப்போம்.
மோடியிடம் இளம் தலைமுறையினர் அதிகம் எதிர்பார்த்தார்களே?
மெகா ஊழல்களே காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்தியது. இந்த ஓராண்டில் ஊழல் என்பதே இல்லை. எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்கவில்லை. இது இளைஞர்களிடம் மோடி அரசு மீதான நம்பிக்கையை அதிகரித் துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் எல்.இ.டி. மின் விளக்குகளை ரூ.560-க்கு வாங்கினார்கள். இப்போது ரூ.180 வாங்குகிறோம். ஊழல் இல்லாததால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை உணர்த்து வதற்காக இந்த உதாரணத்தை கூறுகிறேன்.
3-வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் ஏன்?
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப் பீடு கிடைக்காமல் லட்சக்கணக்கான விவசாயிகள் 20, 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனை தவிர்க்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சாலைகள், ரயில் பாதைகள், பாசன திட்டங்கள், நதிநீர் இணைப்பு மற்றும் தொழிற் சாலைகளுக்கு நிலம் தேவைப் படுகிறது. நிலம் இல்லா விட்டால் ஆகாயத்திலா கால் வாய்கள் வெட்ட முடியும்? ரயில் பாதைகள் அமைக்க முடியும்?
விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்க திட்டமிடும் மோடி அரசு, மீனவர்களிடமிருந்து கடலையும் பறிக்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாரே?
காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனா குமாரி கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கடலில் இருந்து மீனவர்களை விரட்ட காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், இந்த கமிஷன் அறிக்கையை நிராகரித் ததன் மூலம் மீனவர்களை மோடி அரசு காப்பாற்றியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் அமைப்புக்கு தடைவிதிப்பது கருத்துரிமையை பறிப்பதாகாதா?
மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கவில்லை என ஐ.ஐ.டி. நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட மாணவர் அமைப்பு விதிமுறைகளை மீறியதால் ஐ.ஐ.டி. பெயரை பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் என்ற அந்த அமைப்பு இந்து மதத்தை அழிக்க வேண்டும் என நோட்டீஸ் விநியோகித்துள்ளது. இதுபோல மற்ற மதங்களை குறிப்பிட்டால் விட்டு விடுவார்களா?
அயோத்தி போல மதுராவை மாற்ற பாஜக முயற்சிப்பதாக சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளாரே?
மோடி ஆட்சிக்கு வந்தால் மத கலவரம் நடக்கும் என பிரச் சாரம் செய்தார்கள். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பதால் இதுபோன்ற அபத்தமான குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள். தீனத யாள் உபாத்தியாயாவின் சொந்த ஊர் என்பதாலேயே மதுராவில் ஓராண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடத்தினோம்.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூட சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்களே?
இந்துக்களை சீண்டினால் பொறு மையாக இருக்க வேண்டும் என்கி றீர்களா? என்னைப் பொறுத்தவரை இந்த எதிர்வினை கூட போதாது என்றே நினைக்கிறேன். எங்களை குறை சொல்பவர்கள் அக்பரூதீன் ஓவைசி போன்றவர்கள் இந்துக் களை இழிவுபடுத்தி பேசியபோது எங்கே போனார்கள்?
அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லையே?
திமுகவுடன் எங்களுக்கு கொள்கை ரீதியான வேறுபாடுகள் உள்ளன. அதிமுகவுடன் அதுபோல எந்த வேறுபாடும் இல்லை. அதி முக அரசின் செயல்பாடுகளை மாநிலத்தின் எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்து கொண்டு தான் இருக்கிறோம்.
பாஜக அதிமுகவுடன் நெருங்கிச் செல்கிறதா?
தமிழகத்தில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு அரசியல் நாகரிகத்தின் அடிப் படையில் பாஜக தலைவர்கள் வாழ்த்து சொல் வதை அதிமுகவுடன் நெருங்கு வதாக கூறுவது தவறு.
கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வில் இருக்கிறீர்கள். மாநிலத் தலைவர் பதவி கை நழுவியதில் வருத்தம் இல்லையா?
மாநிலத் தலைவரைவிட தேசிய செயலாளர் பதவி மதிப்பு வாய்ந் தது என்பதால் வருத்தம் இல்லை.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.